அமலாக்கப் பிரிவு இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு ஓராண்டு பதவி நீடிப்பு

by Balaji, Nov 15, 2020, 11:15 AM IST

அமலாக்கப் பிரிவு இயக்குனராக தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கப் பிரிவு இயக்குனராக இருந்தவ கர்னால் சிங் ஓய்வு பெற்ற பிறகு சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த கர்னால் சிங் இந்திய அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தின் முதல் இயக்குனர் ஆவார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற சஞ்சய் குமார் மிஸ்ரா இரண்டாவது இயக்குனர் ஆவார்.

1984 ஆவது ஆண்டு பிரிவை சேர்ந்தவர் சஞ்சய் குமார் மிஸ்ரா இந்திய வருவாய்த்துறை சேவை அதிகாரியாக அவர் பணியில் சேர்ந்தார். அமலாக்கப் பிரிவு இயக்குனராக தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அவருக்கு நியமனம்வழங்கப்பட்டது.

எல்லா வங்கி மற்றும் ஊழல் வழக்குகளில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் மோசடி குறித்த வழக்குகளை அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை