போலி கொரோனா டெஸ்ட்டிலிருந்து எஸ்ஸான நடிகர்.. சீனியர் இயக்குனரிடம் தீபாவளி ஆசி..

by Chandru, Nov 15, 2020, 11:12 AM IST

உலகம் முழுவதும் கொரோனா பரவி கோர தாண்டவம் ஆடி முடித்திருக்கும் நிலையில் மீண்டும் கொரோனா ஆட்டம் ஆரம்பாக வாய்ப்பிருப்பதாக சில டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். திரையுலகில் அமிதாப் பச்சன். அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விஷால். நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், தமன்னா கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். இதில் அமிதாப்பச்சன், விஷால் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். சீனியர் நடிகர்கள் வயது காரணமாக தொற்று உடனே பரவும் என்ற எச்சரிக்கையால் படப்பிடிப்பில் பங்கேற்கால் இருந்து வருகின்றனர்.
அண்ணாத்த படப்பிடிப்புக்கு குழுவினர் அனைவரும் தயாராக இருந்தும் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்க இன்னும் சம்மதம் தெரிவிக்காமலிருக்கிறார். ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் என்று கடந்த மாதம் ஒரு தகவல் இணையதளத்தில் வெளியானது. அதற்கு பதில் அளித்த ரஜினி, எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான். ஆனால் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அறிவித்தார். உடல்நிலை பற்றி ரஜினி கருத்து தெரிவித்ததிலிருந்து அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ரஜினியை நேரில் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். எல்லோரது சந்தேகத்தையும் போக்கும் வகையில் ரஜினி காந்த் நேற்று புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் தீபாவளி பட்டாசு வெடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். டாக்டர்கள் அட்வைஸ் ஏற்று அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வது பற்றி முடிவெடுக்க உள்ளார்.

கடந்த வாரம் நடிகர் சிரஞ்சீவி தான் நடிக்கும் ஆச்சர்யா படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்தார். ஷூட்டிங் செல்வதற்கு முன் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் பாசிடிவ் என வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. சிரஞ்சீவியும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் கொரோனா பரிசோதனை கருவிகள் தவறாக சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக காட்டியது பின்னர் தெரியவந்தது. அடுத்தடுத்து வெவ்வேறு 3 பரிசோதனைகள் சிரஞ்சீவிக்கு மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதுபற்றி சிரஞ்சீவி கூறும் போது,டாக்டர்கள் குழு எனக்கு 3 விதமான பரிசோதனைகள் மேற்கொண்டனர். எல்லாவற்றிலும் எனக்கு கொரோனா நெகடிவ் என்றே முடிவு வந்தது. தவறான கருவியால் எனக்கு கொரோனா பாசிடிவ் என்று காட்டியிருக்கிறது. என் மீது பாசம் காட்டிய அனைவருக்கும் இதயப்பூர்வ நன்றி என தெரிவித்தார்.

இதையடுத்து சிரஞ்சீவி ஆச்சர்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு எண்ணி உள்ளார். முன்னதாக அவர் தீபாவளி தினத்தையொட்டி சீனியர் இயக்குனர் கே.விஸ்வநாத் வீட்டுக்கு சென்று அவரிடமும் அவரது மனைவியிடமும் ஆசி பெற்றார். அந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி கொரோனா தொற்று இல்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீனியர் இயக்குனர் கே.விஸ்வாந்த் தெலுங்கில் சரித்திரம் படைத்த பல படங்களை இயக்கியவர் சங்கராபரணம், சுவாதி முதியம் போன்ற படங்களை இயக்கியதுடன் தமிழில் குருதிப்புனல், பகவதி, புதியகீதை போன்ற பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை