ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு தமிழ் பாட புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. சித்தூர் எம்எல்ஏ நடிகை ரோஜாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 30 முதல் 40 பள்ளிகள் தமிழ்வழிக் பள்ளிகளாக இயங்கி வருகின்றது. இப்பள்ளிகளில் தமிழக அரசு கடைப்பிடிக்கும் பாடத்திட்டத்தை தமிழ் படங்களுக்கு அம்மாநில அரசு கடைபிடித்து வருகிறது.
தற்போது ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாடப் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து அங்குள்ள தமிழ் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்குமாறு நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ரோஜாவும், அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே செல்வமணி யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தனர் . இதனையடுத்து ஒரே நாளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆந்திராவில் உள்ள தமிழ் வழி பள்ளிகளுக்காக பத்தாயிரம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்க முதல்வர் உத்தரவிட்டார்.
இதனை பெற்றுக் கொண்ட இயக்குனர் ஆர்.கே. செல்வமணியும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கு புத்தகத்தை வழங்கினர் .
அந் நிகழ்ச்சியில் பேசிய செல்வமணி தமிழக முதல்வர் கேட்டவுடன் உடனடியாக மாணவ மாணவியர்களுக்கு உதவிக்கரம் நீட்டி பாடப்புத்தகங்களை வழங்கினார். தமிழக அரசுக்கும் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பேசினார்..