வேற கட்சியில போய் சேருங்க.. வெடித்தது காங்கிரஸ் உட்கட்சிப் பூசல்..

காங்கிரசில் இருந்து கொண்டே விமர்சிக்காதீர்கள். வேற கட்சிக்கு போய் விடுங்கள் என்று கபில்சிபலுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை அடுத்து தற்காலிக தலைவராக சோனியாகாந்தி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் சேர்ந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். அப்போது சலசலப்புகள் ஏற்பட்டு கடைசியில் சோனியாவே இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார்.

இந்நிலையில், பீகாரில் ஆர்ஜேடி கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதையடுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில்,பீகார் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. இந்த முறையும் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் கட்சித் தலைமை இருக்கப் போகிறதா? கட்சியின் நலனுக்கா நான் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டார். இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பதில் ட்விட் வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இன்று(நவ.18) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:காங்கிரஸ் சரியான கட்சி அல்ல என்று நினைப்பவர்கள், வேறு எந்த கட்சி முற்போக்கான கட்சி என்று நினைக்கிறார்களோ அதில் சேரலாம். அல்லது புதிய கட்சியைத் தொடங்கலாம். அவர்களுக்கு விருப்பமானதை அவர்களே தேர்வு செய்யலாம். அதை விட்டுவிட்டு, மனம் போன போக்கில் பொது வெளியில் பேசக் கூடாது. கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. சோனியா காந்தி குடும்பத்தினரிடம் நெருக்கமாக உள்ள இந்த தலைவர்கள் நேரடியாக அவரை சந்தித்து தனது கருத்துக்களைக் கூறலாமே!
கட்சியின் நலனுக்காகப் பாடுபட நினைத்தால், அதைக் களத்தில் சென்று செய்திருக்கலாமே.

பீகார் தேர்தலின் போது களத்திற்குச் சென்று பணியாற்றியிருக்கலாமே.. அப்படி அவர்கள் செய்தார்களா?இவ்வாறு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் மேலும் பெரிதாகி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds