கட்சி தொடங்கிய இயக்குனர் முதல்வராக நடிக்கிறார்.. டென்ஷனில் விஜய்..

by Chandru, Nov 18, 2020, 13:19 PM IST

அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் விண்ணப்பித்தார். அப்போது முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். இக்கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கனவே தெரிவித்ததுடன் தனது ரசிகர் மன்றத்தினரும் அக்கட்சிக்காகத் தேர்தல் பணியே கட்சி பணியோ செய்யக்கூடாது என்று அறிவித்தார்.

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட பல பரபரப்பான படங்களை இயக்கி அளித்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். சமீபகாலமாக படம் இயக்குவதை நிறுத்தி உள்ளார். ஆனால் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பரபரப்பிலிருக்கும் எஸ்.ஏ.சந் திரசேகர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். எஸ்.ஏ.சந்திர சேகர் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கட்சி ஆரம்பித்ததிலேயே தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது விஜய் கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக முதல்வர் வேடத்தில் அவர் நடிப்பதால் டென்ஷன் அடைந்திருக்கிறாராம்.அரசியல் பின்னணியான கதையான இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். கல்யாணி பிரிய தர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது, மேலும் நூற்றுக் கணக்கான கட்சி ஊழியர்களுடன் எஸ்.ஏ.சி சூழப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அரசியல் கட்சியைப் பதிவு செய்தவுடனேயே எஸ்.ஏ.சி முதலமைச்சராக நடிக்கிறார் என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு முன்னதாக சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்துக்காக 30 கிலோ எடையைச் சிம்பு குறைத்தார்.
தீபாவளி முடிந்து தற்போது பாண்டிச்சேரியில் மீண்டும் மாநாடு படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளதாகவும், அவர் ஆதுல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்தார் சிம்பு.கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது மற்றும் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு பட இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார்.

இப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷனுடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா,பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை