நான்கு மாநிலங்களில் வன்முறை: மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

by Rahini A, Apr 2, 2018, 13:36 PM IST

உச்ச நீதிமன்றத்தின் எஸ்.சி/ எஸ்டி சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசு இதன் மூலம் மேற்கொள்ளும் பாகுபாடுக்கு எதிராகவும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் எஸ்.சி/ எஸ்டி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இன்று காலையிலிருந்து ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் பந்த் நடத்தப்படும் வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் 'பாரத் பந்த்' என்ற ஒரே கோஷத்தை எழுப்பி மத்திய அரசுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலையில் வன்முறை வெடித்ததும் அரசுப் பள்ளி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று எஸ்.சி/ எஸ்டி சட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நான்கு மாநிலங்களில் வன்முறை: மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை