சச்சினின் பதவிக்காலம் நிறைவடைந்தது! மொத்த சம்பளத்தையும் அரசுக்கே திருப்பியளித்தார்!

by Rahini A, Apr 2, 2018, 14:32 PM IST

ராஜ்யசபா எம்.பி ஆகப் பதவி வகித்து வந்த சச்சின் டெண்டுல்கரின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைந்தது.

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவானகக் கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவரது விளையாட்டு சாதனைகளைப் பாரட்டி இந்திய அரசின் பல உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ராஜ்ய சபா நியமன எம்.பி பதவியும் கலை அல்லது விளையாட்டுத் துறையைச் சார்ந்தோருக்கு வழங்கப்படும் பதவி கடந்த ஆறு ஆண்டுஅளுக்கு முன் சச்சினுக்கு வழங்கப்பட்டது.

ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பதவிக் காலம் சசினுக்கு இன்றோடு நிறைவடைகிறது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக சம்பளம், படிக்காசு என அனைத்து சலுகைகளும் சேர்த்து சச்சினுக்கு ஒரு எம்.பி ஆக வழங்கப்பட்ட சம்பளம் 90 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த 90 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் அரசுக்கே திருப்பி அளிப்பதாக அறிவித்தார். இதன் அடிப்படையில் சச்சின் இந்தியப் பிரதமரின் மீட்பு நிவாரணப் பணிகளுக்கான நிதியாக தனது ஊதியத்தை அளித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சச்சினின் பதவிக்காலம் நிறைவடைந்தது! மொத்த சம்பளத்தையும் அரசுக்கே திருப்பியளித்தார்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை