லட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கி இணைப்பு : அமைச்சரவை ஒப்புதல்

by Balaji, Nov 25, 2020, 16:01 PM IST

கடும் சிக்கலில் உழலும் லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது.

சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ், ரிசர்வ் வங்கியால் முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை தன் வசப்படுத்தி விடும். நெருக்கடியில் உள்ள ஒரு வங்கியை மீட்டெடுக்க இந்தியா ஒரு வெளிநாட்டு வங்கியுடன் இணைப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டிபிஎஸ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் உரிமையை எடுத்துக்கொள்ளும்.94 வருடங்களைக் கடந்த சிறந்த வங்கி என்ற பெயர் பெற்றார் லட்சுமி விலாஸ் வங்கி என்ற பெயர் இனி இருக்காது.

You'r reading லட்சுமி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கி இணைப்பு : அமைச்சரவை ஒப்புதல் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை