தீராத சந்தேகம்... மூணாறு அருகே 6 வயது மகள் கண்ணெதிரே தாய் கழுத்து அறுத்து கொலை

by Nishanth, Dec 4, 2020, 11:23 AM IST

மூணாறு அருகே பீருமேட்டில் சந்தேக நோயால் வாலிபர் மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 வயது மகள் முன்னிலையில் இந்த கோர சம்பவம் நடந்தது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பீருமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ராஜலட்சுமி (30). ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் ராஜாவுடன் ராஜலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது உறவை வளர்த்து வந்தனர். இந்நிலையில் இந்த விவரம் ராஜலட்சுமியின் கணவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் லட்சுமி, தன்னுடைய மகளையும், கணவனையும் விட்டுவிட்டு ராஜாவுடன் சென்றுவிட்டார்.

இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் ராஜலட்சுமி மீது ராஜாவுக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ராஜலட்சுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் இருப்பதாக ராஜா சந்தேகித்து வந்தார். இதனால் இவர்களுக்கிடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியை எடுத்து ராஜலட்சுமியின் கழுத்தை அறுத்தார். இந்த சமயத்தில் அவர்களது மகள் வீட்டில் இருந்தார். தன்னுடைய தாயின் கழுத்தைத் தந்தை இருப்பதைப் பார்த்து அந்த சிறுமி கூக்குரலிட்டார்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு என்பதால் பக்கத்து வீட்டினர் அதைக் கண்டு கொள்ளவில்லை. கழுத்து அறுபட்ட ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். நீண்ட நேரத்திற்குப் பின்னர் தான் இந்த கொலை சம்பவம் பக்கத்து வீட்டினருக்குத் தெரிய வந்தது. இது குறித்து பீருமேடு போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்