ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி..

Advertisement

ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அது நடக்காததால், அதிருப்தி தலைவராக மாறினார். பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட்டுக்கு எதிராகத் திரும்பினார். ஆனாலும், முதல்வர் கெலாட்டுக்கு மெஜாரிட்டி இருந்ததால், ஆட்சி தப்பியது.

இந்நிலையில், தற்போது அம்மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 4371 பஞ்சாயத்துகளில் நடந்தது. இதில் 4051ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 1835 பஞ்சாயத்துகளையும், காங்கிரஸ் 1718 பஞ்சாயத்துகளையும், ஆர்.எல்.பி. கட்சி 54, மார்க்சிஸ்ட் 16, பகுஜன்சமாஜ் 3 பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளன. மொத்தம் உள்ள 636 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 326ஐ பாஜகவும், 250ஐ காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. ஆர்.எல்.பி. 10, மார்க்சிஸ்ட் 2 இடங்களில் வென்றுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களிலும் பாஜகவே அதிகபட்சமாக 93 இடங்களில் வென்றுள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் அமைச்சர்களின் தொகுதிகள் உள்ள முக்கிய நகரங்களில் அந்த கட்சி தோற்றுள்ளது.பாஜக வெற்றியை அடுத்து பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறுகையில், வெற்றி பெற்ற பாஜகவினருக்கு வாழ்த்துக்கள். அசோக் கெலாட் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜக மீதுதான் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
/body>