இந்த ஆண்டு அதிக படங்கள் நடிக்கும் நடிகர் யார்?

by Chandru, Dec 9, 2020, 14:56 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களைக் கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபுவின் அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess Film Factory) நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களைத் தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க , இயக்குநர் சசியின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் செல்வகுமார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையைப் பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றிருப்பதில் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு படம் பற்றி கூறியதாவது:இது “பேச்சிலர்” படத்தின் மொத்த படக்குழுவிற்குமே மிகவும் உற்சாகமான தருணம்.ஜீ வி பிரகாஷின் மாயாஜால இசை ஏற்கனவே கணக்கற்ற வகையில் ரசிக இதயங்களைக் கொள்ளையடித்துள்ளது. எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இது வெகு முக்கியமான, அற்புதமானதொரு ஆல்பம்.

தற்போது இசை உலகில் கோலோச்சும் Think Music நிறுவனம் இசை உரிமையைப் பெற்றிருப்பதால் “பேச்சிலர்” உலகம் முழுதும் உள்ள அனைத்து இசை ரசிகர்களையும் சென்றடையும் என்பது உறுதி. விரைவில் பாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பை, டிரெய்லர் மற்றும் படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதியுடன் அறிவிக்க உள்ளோம். ஜீ வி பிரகாஷ் ஜோடியாக திவ்ய பாரதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் பகவதி பெருமாள், YouTube நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா ஊரடங்கிலும் சூர்யா நடித்த சூரரைப்போற்று இசை மற்றும் பாடல்கள் வெளியிடுவதை பிஸியாக இருந்தார் ஜி.வி.பிரகாஷ் சமீபகாலமாக அவர் ஹாலிவுட் தனி ஆல்பம் வெளியிட்டு வருகிறார். அது வரவேற்பும் பெற்றது. கோலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர் யாரென்றால் அவரும் ஜிவி.பிரகாஷ்தான். அய்ங்ஜரன், அயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலால் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாருமில்லை, ட்ரப் சிட்டி (ஹாலிவுட் அறிமுக படம்) என 9 படங்களில் நடிக்கிறார். இது தவிர சில படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை