தமிழ் ரீமேக்கில் ஹீரோவுக்கு ஜோடி சேரும் சிம்ரன்? தபுவுக்கு மாற்றாக நடிக்கும் நடிகை..

by Chandru, Dec 9, 2020, 14:07 PM IST

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான 'அந்தாதுன்' விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன் வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவில் வசூல் ஈட்டியது. சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது. சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்குவதில் போட்டி நிலவியது. அந்த உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார். தமிழில் ரீமேக் ஆகும் இதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியில் ​​'அந்தாதுன்' படத்தின் தபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வேடத்தில் தமிழில் யார் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு முன்னணி நடிகைகளின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இந்த பாத்திரத்தில் சிம்ரனுடன் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

தபுவின் கதாபாத்திரம் படத்தில் முக்கியமானதாக இருக்கும். அவரது பாத்திரத்தை ஈடுசெய்யும் வகையில் ஒரு நடிகையை தேர்வு செய்து வருகிறது படக்குழு. தயாரிப்பாளர்களின் சமீபத்திய தேர்வின்படி, திறமையான நடிகை கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் திறனைக் கொண்டிருப்பதால் சிம்ரன் இந்த பாத்திரத்திற்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று ஆலோத்தனர். சிம்ரன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் முன்பு ஐந்து தமிழ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இது லக்கி ஜோடி என்ற பெயரும் கோலிவுட்டில் பெற்றிருக்கிறது. சிம்ரன் கடந்த ஆண்டு ரஜினியுடன் பேட்ட என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்ருந்தார். ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த ஒரே படம் இது.

இந்த ஆண்டு சிம்ரன் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நெட்பிளிக்ஸ் தயாரிப்பான பாவகதைகள் படத்தில் நடித்தார். அடுத்து மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்டரி: நம்பி விளைவு, சுகர், துருவ நட்சத்திரம். வணங்காமுடி ஆகிய படங்களில் நடிக்கிறார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கை 'பொன்மகள் வந்தாள்' பட இயக்குனர் ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்க உள்ளார். முன்னதாக இப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. அவர் விலகி கொண்டதால் அவருக்கு பதிலாக தற்போது ப்ரட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஏற்றிருக்கிறார். தற்போது இப்படத்தை தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்துவரு வதுடன் படப்பிடிப்பு தொடங்குவது, பிற நட்சத்திர தேர்வு பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடைந்து ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தமிழ் ரீமேக்கில் ஹீரோவுக்கு ஜோடி சேரும் சிம்ரன்? தபுவுக்கு மாற்றாக நடிக்கும் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை