கடந்த ஒரு மாதமாகவே பல நடிகைகள் விடுமுறை கொண்டாடத்தை கையிலெடுத்தனர். காஜல் அகர்வால் தனது தேனிலவை கொண்டாட கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் மாலத்தீவு சென்றார். அவரைத் தொடர்ந்து நடிகைகள் வேதிகா, பிரணிதா, டாப்ஸி, சோனாக்ஷி சின்ஹா, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் என வரிசையாக கடல் தீவான மாலத்தீவு சென்றனர். இவர்களிலிருந்து வித்தியாசமாக யோசித்து நடிகை யாஷிகா பனி பிரதேசமான சிம்லா சென்றார். எல்லோருமே தங்களது ஜாலி அனுபவங்களை புகைப்படங்களாக, கவர்ச்சி படங்களாக பகிர்ந்தனர்.
மாதம், வாரக்கணக்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தற்போது தங்களது விடுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி துபாய் புறப்பட்டு சென்றார். அங்குள்ள விலங்குகள் கண்காட்சிக்கு சென்றவர் அவைகளை அன்போடு நேசித்தார். அங்கிருந்த ஒட்டகம் ஒன்றிற்கு உணவாக இலைகள் கொடுத்தார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். பிறகு வெள்ளை சிங்கம் அருகில் தைரியமாக சென்று மாமிசம் கொடுத்ததுடன், குட்டி சிங்கத்துக்கு புட்டிப் பால் கொடுத்தார். பாண்டா கரடிக்கு உணவளித்தவர் பின்னர் மஞ்சள் நிற மலைப்பாம்பை கையில் எடுத்து வைத்துக்கொண்டார்.
ராய் லடசுமி தனது தந்தை மீது அதிக பாசம் கொண்டவர். அதேபோல மகள் மீது தந்தைக்கு பாசம் அதிகம் கடந்த மாதம் ராய் லட்சுமியின் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அந்த துயரம் தாங்காமல் சொர்க்கத்தில் இருக்கும் தனது தந்தைக்கு கடிதம் எழுதுவதாக நீண்டதொரு கடிதம் வெளியிட்டார். இங்கிருந்ததை விட வலி இல்லாமல் நீங்கள் அங்கிருப்பீர்கள். எங்கிருந்தாலும் நீங்கள் எப்போதும் என் உடனே இருக்கிறீர்கள் என ராய் லட்சுமி கூறி இருந்தார். தந்தை மரணம் அடைந்த துக்கத்திலிருந்து தன்னை திசை திருப்பிக்கொள்ள அவர் துபாய் சுற்றுலா சென்று அங்குள்ள மிருககாட்சி சாலைக்கு அதன் அதிபர் துபாய் ஷேக்கை துணைக்கு அழைத்துக்கொண்டு சுற்றிப் பார்த்தார்.
ராய் லட்சுமி வெளியிட்ட மெசேஜில். விலங்குகளிடம் பழகியது அற்புதம். இந்தவொரு மறக்கமுடியாத அனுபவத்துக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விலங்குகளை நேசியுங்கள். இயற்கையை நேசியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் தான் நடித்துள்ள சிண்ட்ரில்லா படத்தில் இடம் பெற்ற ஆலவஞ்சி.. பாடல் போஸ்டரை பகிர்ந்துக் கொண்டார் ராய் லட்சுமி. தனது டிவிட்டர் பக்கத்தில் சில் காற்றில் ஆடையை பறக்க விட்டு தென்றலின் சுகத்தை அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டார்.