திருப்பதி லட்டு வீடு தேடி வரும் என விளம்பரப்படுத்திய இணைய தளங்கள் மீது வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும் எனப் போலி வெப்சைட் மூலம் ஏமாற்றிய 7 வெப்சைட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

by Balaji, Dec 10, 2020, 19:39 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 3 மாதங்களுக்குக் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதே சமயம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் அனுமதி அளித்தது. இதனைப் பயன்படுத்தி சிலர் திருப்பதி தேவஸ்தான இணையதளம் போல் சில மாற்றங்கள் செய்து வீடு தேடி வரும் திருப்பதி லட்டு பிரசாதம் என விளம்பரப்படுத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் செலுத்தி ஏமாற்றமடைந்தனர். இது குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ஏழு போலி இணையதளங்கள் க இருப்பது கண்டறியப்பட்டு அதை நடத்தி வந்தவர்கள் மீது திருப்பதி கிழக்கு நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடவடிக்கைக்கு உள்ளான இணையத் தளங்களில்

https://balajiprasadam.com/ என்ற இணையதளம் தற்போது செயல்படவில்லை.
தற்போது அந்த வலைத் தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

வலைத்தளம் போலியானது என்று கூறும் கட்டுரை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு உண்மையான முயற்சி செய்தோம். தேவஸ்தானத்தில் இருந்து நேரடியாக லட்டு வாங்கப்படும் என்பதையும் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இதனிடையே சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 7, 2020 அன்று எங்கள் வலைத்தளத்தை நிறுத்திவிட்டோம்.

எங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

மிக முக்கியமாக, யாருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தாலும் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இந்த கடினமான காலங்களில் குறிப்பாகப் பயணம் செய்ய முடியாதவர்களுக்கு மட்டுமே நாங்கள் உதவ விரும்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயத்தையும் ஏற்படுத்துவது எங்கள் நோக்கமாக இருக்கவில்லை. எங்களை மன்னித்து விடுங்கள்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading திருப்பதி லட்டு வீடு தேடி வரும் என விளம்பரப்படுத்திய இணைய தளங்கள் மீது வழக்கு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை