பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக பூனைகளும், நாய்களும், கீரிகளும் பாம்புகளும் கும்பலாக சேர்ந்துள்ளன என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளன.
மும்பையில் பாஜக-வின் 38ஆவது நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது, “எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என பிரச்சாரம் நடக்கிறது. பெருவெள்ளம் ஏற்படும்போது பாம்புகளும் கீரிகளும் பூனைகளும் நாய்களும், சிங்கம், புலிகளும் மரத்தின் மீது ஏறிக்கொண்டு, உயரும் நீர்மட்டத்தை பார்த்து அஞ்சும்.
நான் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பார்த்து கேட்கிறேன். இவர்கள் ஒன்றாக கூடியிருக்கிறார்கள், ஆனால், சித்தாந்தங்களுடன் பொருந்தவில்லை. ஆனால், மோடியின் மீதுள்ள பயத்தால் ஒன்றிணைந்துள்ளார்கள்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற பிரதமர் மோடி. அவரது அரசின் சாதனைகளை பரப்பி, 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு களம் அமைக்க வேண்டும். இடைத்தேர்தலில் 2 மக்களை தொகுதிகளில் வெற்றிபெற்றதை கொண்டாடும் ராகுல், 11 மாநில அரசுகளை இழந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.