டிச17இல் இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் பயணம்

by Balaji, Dec 13, 2020, 13:04 PM IST

இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. இதுவரை இந்த வகையில் நாற்பத்தொரு செயற்கைகோள்களை இஸ்ரோ அனுப்பியிருக்கிறது. 42 ஆவது செயற்கைக் கோளான CMS-01 வரும் 17 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி 50 ராக்கெட் வாயிலாக இந்த செய்ற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

காலநிலையை பொறுத்து அன்று பிற்பகல் 3 மணி 41 நிமிடத்தில் பிஎஸ்எல்வி புறப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது. CMS-01 செயற்கைக் கோளில் விரிவாக்கம் செய்யப்பட்ட சி பாண்டு அலைவரிசை ஸ்பெக்ட்ரம் மூலம் நாட்டின் முக்கிய நிலப்பரப்பு, அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் தொலைத் தொடர்பு சேவைகளை இன்னும் திறம்பட மேற்கொள்ள முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவும் 77 ஆவது ராக்கெட் பிஎஸ்எல்வி -சி-50 என்பது குறிப்பிடத்தக்கது. 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்ட XL ரக 22 ஆவது ராக்கெட் என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம்.

You'r reading டிச17இல் இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் பயணம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை