ஜெயலலிதா வாழ்க்கை படம் முடிந்தது? ரிலீஸ் எப்போது?

by Chandru, Dec 13, 2020, 13:16 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஜெயலலிதா கதாபாத்திரத்துக்காக கங்கனா ரானவத் அவரது மேனரிஸம் எப்படி இருக்கும் என்பதை அவர் நடித்த பழைய படங்களில் கண்டறிந்தார். மேலும் பரத நாட்டியமும் கற்றார். கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பையிலிருந்த கங்கனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொண்டபோது அவரது தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியதே காரணம் என்றார்.

பின்னர் பாலிவுட் பார்ட்டிகளில் போதை மருந்து பயன்படுத்தப்படுகிறது என்றார். இதற்கிடையில் மகராஷ்ட்ரா மாநில ஆளும் சிவசேனா கட்சியுடன் மோதல்போக்கை கடைபிடித்தார். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்போல் மும்பை உள்ளது என்றார். அதற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கங்கனா வீட்டில் மாநகராட்சி விதிமுறைகள் மீறி கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக கூறி அதனை இடிக்க மும்பை மாநாகராட்சி உத்தரவிட்டது. அதன்படி கட்டிடத்தை இடிக்க தொடங்கினார்கள். கங்கனா கோர்ட்டை அணுகி அதற்கு தடை பெற்றார். இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப் பதாக கூறி மத்திய அரசிடமி ருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார்.

மற்றொரு சர்ச்சையில் மத உணர்வை தூண்டி கலவரம் ஏற்படுத்த முயல்கிறார் என்று கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராக கேட்டு 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அந்த உத்தரவுக்கும் கோர்ட்டை அணுகி இடைக்கால உத்தரவு பெற்றிருக்கிறார். இந்த பிரச்னைகளுக்கு இடையில்தான் தலைவி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் கங்கனா கலந்துகொண்டார். அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சட்டமன்ற காட்சிகள் போன்ற முக்கிய காட்சிகளில் அவர் நடித்தார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில். 'எங்கள் லட்சியமாக உருவாக்கி வந்த தலைவி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தோம், அரிதாக ஒரு கதாப்பாத்திரம் கிடைத்தது.

ரத்தமும் சதையுமாக அதனுடன் கலந்துவிட்டேன். அந்த வேடத்தின் மீது காதல் வந்து விட்டது. ஆனால் இப்போது திடீரென்று அதற்கு பை சொல்லு நேரம். கலங்கிய உணர்வுகள் சிவந்த இதயத்துடன் அதற்கு பை சொல்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக வாழ்நாள் முழுவதும் படக்குழுவுக்கு நன்றி கூறுவேன் என்றார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதில் அரவிந்த் சுவாமி, பிரகாஷ் ராஜ், பூர்ணா, மது, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். தலைவி படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன் வெளியிடுவதா அல்லது பின்னர் வெளியிடுவதா என்ற ஊசாலாட்டம் எழுந்துள்ளது.

You'r reading ஜெயலலிதா வாழ்க்கை படம் முடிந்தது? ரிலீஸ் எப்போது? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை