இஸ்மாலாபாத்: கடன் பிரச்சனையில் இருந்து பாகிஸ்தானைச் சீனா மீட்டெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு 2 முறை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியா சென்றபோது, இந்நாட்டு தலைவர்களிடம் தங்கள் நாட்டுக்குக் கடன் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதிப் பொதியை வழங்க சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது.
தொடர்ந்து, 3 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க உதவியாகவும், 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வருடாந்திர எண்ணெய் மற்றும் எரிவாயு வாகவும் வழங்க ஒப்புக்கொண்டது. இதற்காக பாகிஸ்தான் அரசு 3.2% வட்டி செலுத்தி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான உறவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அரசு, பாகிஸ்தான் அரசுக்கு வழங்கிய கடன் தொகையில் 3 பில்லியன் டாலர் கடனை அளிக்க வலியுறுத்தியது.
தொடர்ந்து, கடந்த மே மாதம் 1 பில்லியன் டாலர் கடனை சவுதி அரேபியாவிற்குப் பாகிஸ்தான் அளித்தது. இருப்பினும், மீதமுள்ள 2 பில்லியன் டாலர் கடனை வழங்கக் கோரி சவுதி அரேபியா தொடர்ந்து பாகிஸ்தானைக் கட்டாயப்படுத்தி வந்தது.ஆனால், பாகிஸ்தான் தங்களைக் காத்துக்கொள்ளத் தனது வனச் சட்டங்களை மீறி அரபு அமீரகத்துக்கு சுமார் 150 அரியவகை கழுகுகளை அனுப்பி வைத்தது. இருப்பினும், தொடர்ந்து கடனை வழங்க சவுதி அரேபியா கோரியது. கச்சா எண்ணெய்யை அளிப்பதையும் நிறுத்தியது.
இந்நிலையில், கடன் பிரச்சனையிலிருந்து பாகிஸ்தான் மீளச் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. சவுதி அரேபியாவிற்குப் பாகிஸ்தான் அளிக்க வேண்டிய கடனை வழங்குவதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.