மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!!

by Sasitharan, Dec 14, 2020, 19:11 PM IST

லக்னோ: தங்களுடன் நடனமாட இழுத்துச் சென்றதால், மணமகனின் நண்பர்கள் செயலால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் கடந்த 11-ம் தேதி தேதி திருமணம் நடக்க விருந்தது. இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண விழாவிற்காக பரேலிமாவட்டத்தில் உள்ள மணமகன் கிராமத்திற்கு வந்தனர்.

இதற்கிடையே, திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகனின் சில நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் இரு தரப்பு வீட்டார் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மணமகள் திருமணத்தை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார்.

இதனையடுத்து, மணமகளின் குடும்பத்தார், மணமகனின் குடும்பத்திற்கு எதிராகக் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்தனர். தொடர்ந்து, போலீசார் சமாதானமாகப் பேசி மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்திற்குத் திருமண செலவான ரூ 6.5 லட்சம் செலுத்த ஒப்புக் கொள்ள வைத்தனர். இதனால், இரு தரப்பினரும் வழக்கு ஏதுமின்றி பிரச்சனையை முடித்துக்கொண்டனர்.

You'r reading மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை