கேரள உள்ளாட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

by Nishanth, Dec 16, 2020, 09:18 AM IST

கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது . பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 73.13 சதவீத வாக்குகளும், 10ம் தேதி கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் 76.7 8 சதவீத வாக்குகளும், 14ம் தேதி கோழிக்கோடு, மலப்புரம் உட்பட 4 மாவட்டங்களில் நடந்த இறுதிக் கட்ட தேர்தலில் 78.2 சத வீத வாக்குகளும் பதிவாகின. மூன்று கட்டங்களிலும் சேர்த்து 78.64 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் உள்ளது.இதன் பின்னர் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கின்ற போதிலும், மாநகராட்சிகளில் இடது முன்னணி முன்னிலை வகிக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற சில வார்டுகளில் தற்போது அக்கட்சி பின்னணியில் உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால் எந்த மாநகராட்சியிலும் பாஜக முன்னிலையில் இல்லை. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பாஜக 2வது இடத்தில் உள்ளது.

You'r reading கேரள உள்ளாட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை