டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். இதற்கிடையே, குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்த காலத்தைப் பற்றிய நினைவுக்குறிப்பு புத்தகம் 'The Presidential Years' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகத்தின் சில பகுதிகளைப் புத்தக வெளியீட்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
ஆனால்,பிரணாப் முகர்ஜியின் மகனான அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டரில், புத்தகத்தை ஒருமுறை அதை நான் முழுமையாகப் படிக்க வேண்டும் என்றும் புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்திவைக்குமாறு பதிவிட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தந்தை மரணிப்பதற்கு முன் கடைசியாக எழுதிய புத்தகம் இது. இறுதியாக ஒருமுறை படித்து, அவர் கைப்பட திருத்திக் கொடுத்தப் பிறகு தான் புத்தகம் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, The Presidential Years' புத்தகத்திலிருந்து வெளியான சிறு பகுதியில் காங்கிரஸ் பற்றிய பிரணாப் முகர்ஜியின் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டிருக்கிறது. நான் குடியரசுத் தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேவையான இடத்தில் தன் கவனத்தை இழந்துவிட்டது காங்கிரஸ் குறித்தும் தற்போதைய மத்திய பாஜக அரசு குறித்தும் பிரணாப் முகர்ஜி எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் மற்றும் மகள் ஷர்மிஸ்தா சண்டை காரணமாக The Presidential Years புத்தகம் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.