வாக்குறுதிப்படி அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. பீகார் அமைச்சரவை ஒப்புதல்!

by Sasitharan, Dec 16, 2020, 18:42 PM IST

பாட்னா: பீகாரில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.தொடர்ந்து, 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதல்வராகக் கடந்த மாதம் 16-ம் தேதி பதவியேற்றார்.

இதற்கிடையே, பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவோம் என்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசம் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்தநிலையில், மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, பீகாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பீகார் மாநில துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசிகளை மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாகச் செலுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

You'r reading வாக்குறுதிப்படி அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. பீகார் அமைச்சரவை ஒப்புதல்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை