டெல்லியில் மக்களை வாட்டும் கடுங்குளிர்.. 15 டிகிரியாக குறைந்தது..

by எஸ். எம். கணபதி, Dec 18, 2020, 09:25 AM IST

டெல்லியில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த ஒரு வாரக் காலமாகக் கடுங்குளிர் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக 4 நாட்களாகக் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரியாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இது சாதாரண வெப்பநிலையை விட 7 டிகிரி குறைவாகும். குறிப்பாக, பனியுடன் கூடிய காற்று 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் வீசுவதால், குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காலையில் மக்கள் நெருப்பு மூட்டி, குளிர்காயும் காட்சிகளைக் காண முடிகிறது. மேலும், மவுன்ட் அபு, சுரு, பிகானீர், சிகார், பேரெய்லி, குல்மார்க் உள்ளிட்ட வடமாநில நகரங்களிலும் வெப்பநிலை இயல்பை விட வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தற்போது நிலவும் கடுங்குளிர் வரும் 21ம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You'r reading டெல்லியில் மக்களை வாட்டும் கடுங்குளிர்.. 15 டிகிரியாக குறைந்தது.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை