எம்.ஐ.எம். கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது என்பவரும் அவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக எம்.ஐ.எம். கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் உறவினர் குடும்பத்தினர் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் ( டி.ஆர்.எஸ் ) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பாரூக் அகமது தனது ஆதரவாளர்களுடன் தனது உறவினரின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இரு தரப்பிற்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாரூக் அகமது துப்பாக்கியால் சுட்டும் கத்தியைக் கொண்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஜமீர், மோத்தேசன், மன்னன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அதிலாபாத் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் குறித்து குறித்து ஐ.ஜி.நாகிரெட்டி, எஸ்.பி. சத்தியநாராயணா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் : பாரூக் அகமதுவை கைது செய்து விட்டோம். இரு குடும்பத்திற்கும் இடையே இருந்த முன்விரோதம்தான் இந்தச் துப்பாக்கி சூட்டிற்கு காரணம். உரிமம் பெற்ற துப்பாக்கியால் தான் பாரூக் அகமது துப்பா சூடு நடத்தி உள்ளார். எனவே ஃபாரூக்கிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளோம் . அவரது துப்பாக்கி லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.