ஹீரோவை இறுக்கி பிடித்து கதறவிட்ட வில்லன்.. இது உடும்பு பிடி இல்லை கரடி பிடி..

by Chandru, Dec 19, 2020, 16:24 PM IST

கன்னட நடிகர் யஷ், கே.ஜி எஃப் படத்துக்குப் பிறகு அனைத்து மொழி நடிகர் ஆகிவிட்டார். அப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி எல்லா மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கே ஜி எஃப் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் நடிக்கிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன் சஞ்சய்தத் மூச்சு திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிந்தது .

ஆனால் அவருக்கு நுரையீரலில் கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்து அதற்கான சிகிச்சை பெற்றார். அப்போது அவரது புகைப் படம் ஒன்று வெளியாகி வைரலானது. அதில் கட்டு மஸ்தாக இருந்த சஞ்சய் தத் உடல் மெலிந்து பரிதாபமாக காணப்பட்டார். ஆனால் சில மாத சிகிச்சைக்கு பிறகு அவர் குணமாகிவிட்டதாக வீடு திரும்பியதுடன் கே ஜி எஃப் 2ம்பாக படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அங்கு கிளைமாகஸ் சண்டை காட்சிகளில் நடிக்கிறார்.

உடல்நிலை சரியில்லாத நிலையில் டூப் நடிகரை வைத்து காட்சிகள் படமாக இயக்குனர் எண்ணியபோது அதற்கு சஞ்சய் தத் சம்மதிக்கவில்லை. டூப் வேண்டாம் நானே சண்டை காட்சியில் நடிக்கிறேன் என்றார். சஞ்சய்தத்துக்கு கருப்பான மேக் அப் உடல் முழுவதும் போடப்பட்டிருந்தது.ஹீரோ யஷ்வுடன் அவர் மோதிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. யஷ்ஷை கட்டிப் பிடித்து உருளும் காட்சியில் இறுக்கமாக பிடிக்க வேண்டும் என்று காட்சி அமைக்கப்பட்டது. அதன்படி யஷ்ஷை சஞ்சய்தத் இறுக்கமாக கட்டிப் பிடித்தார். இதில் அவர் பிடியிலிருந்து விடுபட முடியாமல் சிக்கிக் கொண்டார் யஷ். காட்சி முடிந்த பிறகு பார்த்தபோது யஷ் அணிந்திருந்த டி ஷர்ட் முழுவதும் சஞ்சய் தத் அணிந்திருந்த கருப்பு மேக் அப் ஒட்டியிருந்தது.

அதை புகைப்படமாக எடுத்து நெட்டில் பகிர்ந்த யஷ், இது என்ன கறை தெரியுமா? கிளைமாக்ஸ் காட்சியில் சஞ்சய் தத் என்னை கரடி பிடியாகக் கட்டிப்பிடித்த போது ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.சஞ்சய் தத் கேன்சர் பாதிப்பால் உடல் தளர்ந்திருப்பார் என்று எண்ணிய ஸ்டண்ட் மாஸ்டரும் அவரது உடும்பு பிடி அல்ல இறுக்கமான கரடி பிடியை கண்டு அசந்து போனார். இன்னும் சஞ்சய் தத் ஃபிட்டாக இருப்பதை இது காட்டுவதாகப் படக் குழுவினர் தெரிவித்தனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை