புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து யாரும் வராதீர்கள்- கொரோனா பரவலின் ஒரு பகுதியாகி விடாதீர்கள் என்று ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தது அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார் இதற்குத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து இரு தரப்பும் தெரிவித்துவரும் கருத்துக்களால் சர்ச்சை அதிகரித்தது. செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்ற அரசு முடிவை மீண்டும் அறிவித்தார்.
அவரது பேட்டி தொடர்பான கருத்துக்களை வெளியான நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் பதிவில்,புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டாம். அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு யாரும் புத்தாண்டு கொண்டாடுவதற்காகவர வேண்டாம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப் படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.எதிர் எதிர்க் கருத்துக்களைக் கேட்டு புதுச்சேரி மக்கள் புத்தாண்டைக் கொண்டாடலாமா வேண்டாமா என்ற புதுவித குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.