2வது தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு பரிந்துரை!

by Sasitharan, Jan 2, 2021, 20:16 PM IST

இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து மிக விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அசாம், பஞ்சாப் உள்பட நான்கு மாநிலங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 4 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையைப் பார்வையிடுதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சென்றிருந்தார். ஒத்திகையை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகவே போடப்படும்." என்றார்.

இதற்கிடையே, தற்போது ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. சிரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டை தொடர்ந்து அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் பரிந்துரைக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி கோவாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 2வது தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு பரிந்துரை! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை