3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

by Sasitharan, Jan 6, 2021, 21:39 PM IST

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வரை மோப்ப நாய் உதவியுடன் மகாராஷ்டிரா போலீசார் கண்டறிந்துள்ளனர். மும்பை தானே பகுதியில் குடிசைப்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதனை கண்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இருப்பினும், மர்மநபர் சிறுமி கடத்தி தப்பித்துச் சென்றுள்ளான்.

தொடர்ந்து, அருகே உள்ள வயல் வெளியில் சிறுமியை கண்டுபிடித்த பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, கடத்தி சென்ற மர்மநபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு ஜோடி செருப்பு கிடைத்தது. இதனை கொண்டு சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களை கைது செய்து சிறுமியின் தாயார் முன்னிலையில் நிறுத்தினர். இருப்பினும், சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை.

தொடர்ந்து மோப்ப நாய் உதவியை நாடி போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பு காண்பிக்கப்பட்டது. அதை நுகர்ந்த மோப்ப நாய், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபரின் குடிசைப்பகுதியை நோக்கிச் சென்றது. அங்கு மர்மநபரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது 376 மற்றும் 363 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை