ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீசார் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரைக் கைது செய்தனர். அதில் சர்வதேச அளவில் செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ள சசிகலாவின் உறவினரான பாஸ்கரனும் ஒருவர்.இதுகுறித்து கூடுதல் எஸ்.பி.தேவபிரசாத் கூறியதாவது : செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பாஸ்கரனை ஏற்கனவே சுங்கத்துறை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இருப்பினும் செம்மரக்கடத்தலில் கடப்பாவை சேர்ந்த ராகவேந்திர ரெட்டியு, சித்தூர் மாவட்டம் பீலேருவை சேர்ந்த இருவர், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு கூலித் தொழிலாளர்கள் மற்றும் எட்டு உள்ளூர் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து பாஸ்கரன் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்துமொத்தம் 55 செம்மர கட்டைகள் மற்றும் 2 கார்கள், சுமார் 300 கிராம் தங்கம், 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஸ்கரன் மீது 21 செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளரவு. இந்த நிலையில் சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து கடத்தலில் ஈடுபபட்டு தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் கடப்பாவைச் சேர்ந்த ராகவேந்திர ரெட்டியுடன் இணைந்து தமிழகத்தில் இருந்து கூலி தொழிலாளர்களை வரவழைத்துக் கடப்பா மாவட்ட வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கடத்தல்காரர்களுக்கு அனுப்பி வந்துள்ளனர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். கைது செய்யப்பட்டுள்ள பாஸ்கரன் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனரான விவேக்கின் மாமனார் ஆவார் .