இலங்கைக்கு கடத்த முயன்ற 1250 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1250 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது

by Balaji, Jan 9, 2021, 19:23 PM IST

இலங்கையில் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம் வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் படகு மூலம் மஞ்சள் மூட்டைகளைக் கடத்திக்கொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ விரலி மஞ்சள் மற்றும் நாட்டுப் படகை இராமேஸ்வரம் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனினும் இச்சம்பவம் தொடர்பாக யாரும் பிடிபடவில்லை கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இன்று இந்தியக் கடலோர காவல் படையினர் 750கிலோ மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.சமீபகாலமாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மூடை மூடையாக மஞ்சள் கடத்திச் செல்வதும் அவற்றில் பலர் போலீசிடம் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

You'r reading இலங்கைக்கு கடத்த முயன்ற 1250 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை