கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Jan 9, 2021, 19:29 PM IST

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 19.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்

மொத்த பணியிடங்கள்: 190

தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில்(B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry) இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பருவ கால உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி

பருவ கால காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

பணிக்கு ஊதியம்:

பட்டியல் எழுத்தர்: ரூ.2410/- + DA
உதவுபவர்: ரூ. 2359/- + DA
காவலர்: ரு. 2359/- + DA

வயது: 01.07.2020 தேதி படி, குறைந்தபட்சம் வயது: 18 & அதிகபட்ச வயது: OC – 30, BC/MBC – 32, SC/ST – 35

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் 19.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்,
மண்டல மேலாளர் அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நெல்லிக்குப்பம் ரோடு,
கடலூர்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை