நான் ஒன்றும் மீட்பர் அல்ல... நடிகர் சோனு சூட் புத்தகம் வெளியீடு

by Balaji, Jan 9, 2021, 19:36 PM IST

திரையில் வில்லனாகவும், நிஜ வாழ்வில் ஹீரோவாகவும் வலம்வரும் சோனு சூட், தற்போது நான் ஒன்றும் ஏற்படவில்லை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சோனு சூட். தமிழில் ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிப்பிற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பொது நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடக்கத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் அவர்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கினர்.சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல, பேருந்து, ரயில்கள் மற்றும் விமானங்களையும் சோனு சூட் ஏற்பாடு செய்தார்.

இதற்காக ஐநாவின் சிறந்த மனிதாபிமான செயலுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து பல உதவிகள் செய்து வரும் சோனுசூட் தற்போது சிரஞ்சீவியின் ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பில் வேலை செய்து வரும் 100 தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார் சோனுசூட்.இந்த நிலையில் தற்போது "ஐ அம் நோ மெசியா" ( நான் ஒன்றும் மீட்பர் அல்ல) என்ற ஒரு புத்தகத்தை ஓசையின்றி வெளியிட்டுள்ளார் சோனுசூட்.இந்த புத்தகம் ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் தொழிலார்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எடுத்துக் கூறுகிறது.

எழுத்தாளர் மீனா என்பவருடன் இணைந்து சோனு சூட் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை தன் கடமையாகப் பார்ப்பதாகவும், வெற்றியுடன் சமூகப் பொறுப்பும் வரவேண்டும் என்று தன் பெற்றோர் தனக்குக் கூறியதை இப்போது தாம் செயல்படுத்தி வருவதாகவும் . இந்த புத்தகம் குறித்து சோனுசூட் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading நான் ஒன்றும் மீட்பர் அல்ல... நடிகர் சோனு சூட் புத்தகம் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை