வாட்ஸ் அப் கெடுபிடி : சிக்கலைத் தீர்க்கிறது சிக்னல் செயலி

by Balaji, Jan 9, 2021, 19:41 PM IST

வாட்ஸ் அப் செயலியின் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் "சிக்னல்" என்ற செயலிக்கு மாறி வருகின்றனர்.பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகிய இருவரும் இணைந்து 2009ம் ஆண்டு தொடங்கிய செயலி தான் வாட்ஸ்அப். மிகக் குறுகிய காலத்தில் உலக அளவில் பிரபலமடைந்த இந்த செயலியைப் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் செயலி நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிக் கொண்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் - ஐ கைப்பற்றிய பிறகு அதில் பல கூடுதல் வசதிகள் வாட்ஸ் அப் ல் அறிமுகம் செய்யப்பட்டது.

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் மிகவும் இரகசியமாகவே இருக்கும்.யாராலும் படிக்க முடியாது என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் திடீரென பயனாளர்களுக்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.அதாவது தங்களது பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பை உபயோக படுத்துவோர் தங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். அதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். இதற்காக வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். வாட்ஸ்அப் நிறுவனம்.

தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை வியாபார ரீதியாக வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்றியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.இது தொலைப்பேசியை ஒட்டுக் கேட்பது போன்று தனி மனித உரிமையை மீறும் செயல் என்று உலகம் முழுவதிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.ஆனாலும் வாட்ஸ்அப் நிறுவனம் அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை.

இந்தநிலையில் இது வேலைக்கு ஆகாது என்று வாட்ஸ் அப் - ஐ ஏராளமானோர் புறக்கணித்து வருகின்றனர். அடுத்து இதே மாதிரி செயலி என்னப்பா இருக்கு? என்று கேட்கும் பலருக்கும் முதலில் கிடைக்கும் விடை சிக்னல் என்ற செயலிதான். வாட்ஸ் அப்பில் இருந்து லட்சக்கணக்கானோர் விலகி சிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகிறார்கள். சிக்னல் செயலியும் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அழைப்புகளையும் தருவதால், திடீரென்று சிக்னல் செயலிக்குச் செல்வாக்கு அதிகரித்து உள்ளது.

You'r reading வாட்ஸ் அப் கெடுபிடி : சிக்கலைத் தீர்க்கிறது சிக்னல் செயலி Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை