தயங்க வைக்கும் தடுப்பூசி

Advertisement

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்கியது. பல இடங்களில் இந்த பணிகள் மிகவும் தாமதமாக துவங்கியிருக்கிறது. காரணம் இந்த தடுப்பூசி போட பலரும் தயக்கம் காட்டுகின்றனர் குறிப்பாக மருத்துவத் துறை ஊழியர்கள் கூட மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.இந்தியா முழுவதிலும் சுமார் 3,000 மையங்களில் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடியும் நாட்டின் பல மாநிலங்களில் அந்தந்த முதல்வர்கள் அமைச்சர்கள் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துள்ளனர். முதல் கட்டமாக முன் களப்பணி யாளர்களுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும் இதற்கு மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.புதுவை முதல்வர் நாராயணசாமி முதலில் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளட்டும். அதன் பிறகு மக்கள் போட்டுக் கொள்வார்கள் என்று சொல்லியிருக்கிறார் இதே கேள்வியை கேட்கும் சாமானியனுக்கு அதிகார வர்க்கத்தில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி மொத்தம் 166 மையங்களில் போடப்படும்என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அவை அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் சுகாதார ஊழியர்கள் மற்றும் நோய் தடுப்பு பணியாளர்கள் மருத்துவர்கள் என 50 சதவீதம் பேர் தடுப்பூசி அச்சத்தால் பெயர்களை பதிவு செய்யவில்லை என தகவல்.

இது குறித்து சில மருத்துவர்கள் கூறுகையில் தடுப்பூசி என்றாலே குறைந்த பட்சம் இரண்டு வருட சோதனைக்கு பின்புதான் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த கொரோனா தடுப்பூசி வெறும் 8 மாதங்களுக்குள் கண்டுபிடித்து உடனேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதால் அதன் மீது டாக்டர்களுக்கு கூட நம்பிக்கை இல்லை.மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இரண்டாவது அலை வரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளதால் அவசரம் அவசரமாக இந்த ஊசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் கோவிஷிப்ட் என்ற ஊசியையும் பயன்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் மருத்துவர்களே இந்த ஊசியை போட்டுக் கொள்ள தயங்குகின்றனர்.நாடு முழுவதும் பொதுமக்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது.இந்த தடுப்பூசி சுமார் 30 கோடி மக்களுக்கு போடப்படும் என கூறப்படும் நிலையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்னணி பணியாளர்கள், மருத்துவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதும் புதிய வகை தடுப்பூசியை போடுவது குறித்த அச்சத்தாலும் முன்னுரிமை வழங்கப்பட்ட இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தங்கள் பெயர்களை இதுவரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.இன்று தடுப்பூசி போடப்பட்ட முன்கள பணியாளர்களிடம் எழுத்து மூலம் கடிதம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தில்லி ராம் லோகியா மருத்துவமனை மருத்துவர்கக் தங்களுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>