புல்லட் தாலி சேலஞ்ச்: 1 மணி நேரத்தில் சாப்பிட்டு புல்லட்டை பரிசாக வெற்ற இளைஞர்

by Sasitharan, Jan 20, 2021, 16:49 PM IST

மும்பை: கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் களையிழந்ததால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே வாட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ளது சிவ்ராஜ் ஹோட்டல் உரிமையாளர் அதுல் வைகர், புல்லட் தாலி சேலஞ்ச் எனும் புதுமையான போட்டியை அறிவித்துள்ளார்.

புல்லட் தாலி என்பது அசைவ உணவுகள் அடங்கிய ஒரு தட்டு. இந்த தட்டில் 4 கிலோ மட்டன் மற்றும் மீன்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் 12 உணவுகளை உள்ளடக்கியது. ஃபிரைட் சுர்மாய், பாம்ஃப்ரெட் ஃப்ரைட் ஃபிஷ், சிக்கன் தந்தூரி, உலர் மட்டன், கிரே மட்டன், சிக்கன் மசாலா மற்றும் கொலும்பி (இறால்) பிரியாணி ஆகியவை இந்த உணவுகளில் அடங்கும். ஒவ்வொரு தாலியின் விலை ரூ.2,500 என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புல்லட் தாலி தட்டை 1 மணி நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பரிசாக வழங்கப்படும் அதுல் வைகர் அறிவித்தார்.
இதையடுத்து உணவுப் போட்டியில் பங்கேற்ற பலர் உணவகத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோம்நாத் பவார் என்பவர் புல்லட் தாலி சேலஞ்ச் சேலஞ்சில் வெற்றிப் பெற்று, ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை பரிசாக வென்றுள்ளதாக அதுல் வைகர் தெரிவித்துள்ளார்.

You'r reading புல்லட் தாலி சேலஞ்ச்: 1 மணி நேரத்தில் சாப்பிட்டு புல்லட்டை பரிசாக வெற்ற இளைஞர் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை