20 லட்சம் டோஸ் தடுப்பூசி மிருத சஞ்சீவினி மலையுடன் அனுமானின் படத்துடன் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

by Nishanth, Jan 23, 2021, 11:03 AM IST

20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.இந்தியா சொந்தமாக தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை கேட்டு விண்ணப்பித்துள்ளன.

முதல் கட்டமாக பங்களாதேஷ், மியான்மர், நேபாளம் மற்றும் பூடான் உள்பட நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இது தவிர பிரேசில் நாட்டுக்கும் சமீபத்தில் 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பல நாட்களுக்கு முன்பே பிரேசில் தன்னுடைய விமானத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த விமானத்தில் நேற்று அந்த நாட்டுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: சர்வதேச அளவில் கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை தீர்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு நண்பர் எனக்கு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன். கொரோனாவை எதிர்த்து போராடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா போன்ற நாட்டின் நட்பு கிடைத்துள்ளதும் பெருமையாக உள்ளது. பிரேசிலுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்ததற்கு நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரேசில் அதிபர் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய இந்த ட்வீட்டில் லட்சுமணனுக்காக அனுமன் சஞ்சீவினி மலையை கொண்டு செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். பிரேசில் நாட்டு மொழியில் தான் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ள போதிலும், ஆங்கிலத்திலும் அதன் மொழிபெயர்ப்பு உள்ளது. தொடக்கத்தில் நமஸ்கார் என்றும் ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடைசியில் தன்யவாத் என்ற வார்த்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மிருத சஞ்சீவினி மலையுடன் அனுமானின் படத்துடன் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை