எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் ஹீரோவான இயக்குனர்... நான் கடவுள் இல்லை

Advertisement

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப் படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”. இதில் சமுத்திரகனி சி பி சிஐடி அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌன குரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார்.

வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.
ஓய்வு பெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா. சமுத்திரக்கனியின் தாயாக மதுரையைச் சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரக்கனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள், இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், சூப்பர் ஜீ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத் தொகுப்பைப் பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.“நான் கடவுள் இல்லை” படத்தை பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது: குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரக்கனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தைப் பற்றி நெகிழ்ந்து பேசி பாராட் டினார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்பலமாக இயக்கும் எண்ணத்தை என்னுள் வித்திட்டார்.

சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையைக் கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு எனத் தொடர் படப் பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார்” என்றார். மேலும் இத்திரைப்படம் சமுத்திரகனிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் கூறினார். மேலும் அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கறையும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>