திருப்பதி கோவிலில் சுற்றுலாத்துறை மூலம் சிறப்பு தரிசனம் இன்று முதல் மீண்டும் துவக்கம்

by Balaji, Feb 2, 2021, 12:24 PM IST

சுற்றுலா துறை சார்பாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவது இன்று முதல் மீண்டும் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது . இதையடுத்து நாளுக்குநாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் கட்டண மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளை அதிக அளவில் வழங்கிவருகிறது . தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இருந்து சுற்றுலா துறை சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் இன்று முதல் மீண்டும் வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக இந்த சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. படிப்படியான தளர்வுக்கு பின்னர் இந்த சேவையை இன்று முதல் தேவஸ்தானம் மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் தினசரி 2250 டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது ஆந்திர சுற்றுலாத்துறைக்கு 1000 டிக்கெட்டுகளும், தெலங்கானா சுற்றுலாத்துறைக்கு 350 டிக்கெட்டுகள். தமிழக சுற்றுலாத்துறை மற்றும் ஏர்இந்தியா விற்கு தலா 250 டிக்கெட்டுகள். கர்நாடக சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகள். ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் கோவா மாநில சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

You'r reading திருப்பதி கோவிலில் சுற்றுலாத்துறை மூலம் சிறப்பு தரிசனம் இன்று முதல் மீண்டும் துவக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை