சர்வதேச அளவில் ஜனநாயக குறியீடு பட்டியலில் இந்தியா இரண்டு இடம் சரிந்துள்ளதுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வு பிரிவு, ஜனநாயக குறியீடு பட்டியல் குறித்து தெரிவிக்கையில், சுமார் 167 நாடுகள் கொண்ட ஜனநாயக குறியீடு பட்டியலில் இந்தியா இரண்டு இடம் சரிந்துள்ளது. 2020-ம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீடு பட்டியலில் 53-வது இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் தான் இந்த பட்டியலில் இந்திய பின்தங்க காரணம் என்றும் EIU தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டை காட்டிலும் 0.29 புள்ளிகள் இந்தியா பின்தங்கியதால் இரண்டு இடம் சரிந்துள்ளது. இருப்பினும், ஜனநாயக குறியீடு பட்டியலில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா 27-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைபோல், இந்தியாவை ஜனநாயகம் குன்றிவரும் நாடுகளின் பட்டியலில் EIU வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மாதிரியான நாடுகளும் ஜனநாயகம் குன்றிவரும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, கனடா மாதிரியான நாடுகள் இந்த பட்டியலில் முதல் நிலை நாடுகளாக இடம் பெற்றுள்ளன. வட கொரியா இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.