கடந்த ஆண்டை விட 7 கோடி குறைவு.. காங்கிரஸ் நன்கொடை வசூலில் ஒரு சுவாரஸ்யம்!

by Sasitharan, Feb 5, 2021, 18:46 PM IST

2019-20-ம் ஆண்டில் கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் பங்களிப்பு அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றுள்ளது. அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகளை ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் பட்டியலிட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் 2019-20-ம் ஆண்டிற்கான நன்கொடை விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது. காங்கிரஸ் தாக்கல் செய்த அறிக்கை, தற்போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுளள்து.

அதன்படி, கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரூ.50,000 பங்களிப்பையும், அவரது மகனும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கட்சி நிதிக்கு ரூ.54,000 நன்கொடையும் அளித்துள்ளனர். ஆனால், சொனியாவிற்கு அடுத்தப்படியாக உள்ள தலைவர்கள் சோனியா , ராகுல் காந்தியை விட அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதியளித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல், தனது கட்சி அதிகப்பட்சமாக ரூ.3 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர், மிலிந்த் தியோரா மற்றும் ராஜ் பப்பர் போன்ற தலைவர்களும் ராகுல், சோனியாவை விட அதிக நிதி அளித்துள்ளனர். ராஜ் பப்பர் ரூ.1.88 லட்சமும், மிலிந்த் தியோரா ரூ.1 லட்சமும், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர் ஆகியோர் தலா ரூ.54,000 நன்கொடையாக அளித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மறைந்த மோதிலால் வோரா, மறைந்த அகமது படேல், முன்னாள் மத்திய மந்திரி பிரீனீத் கவுர் மற்றும் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கட்சிக்கு ரூ.54,000 நிதி நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சிக்கு ரூ.54,000 நன்கொடையாக அளித்துள்ளனர். 2019-20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.139 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது.

2018-19-ம் பெறப்பட்ட நன்கொடையை விட 2019-20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 7 கோடி குறைவாக பெற்றுள்ளது. 2018-19-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.146 கோடி நன்கொடையாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading கடந்த ஆண்டை விட 7 கோடி குறைவு.. காங்கிரஸ் நன்கொடை வசூலில் ஒரு சுவாரஸ்யம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை