நாட்டிலுள்ள குடிமகன்கள் அனைவரும் சைபர் கண்காணிப்பாளர்களாக முடியும் இதற்காக சைபர் கிரைம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் 'சைபர் கிரைம் செல்' என்ற புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது இந்த திட்டத்தின் மூலம் இந்திய நாட்டில் வசிக்கும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாகச் சேரலாம்.
இந்த புதிய திட்டத்தின்படி, குழந்தை ஆபாசப் படம், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகள், கருத்துகள்,காட்சிகள் ஆகிய உள்ளடக்கங்களை கண்டுபிடித்தல், சட்டத்தை மீறும் பிரசாரங்கள், செய்திகள் குறித்து அடையாளம் காணவும் மக்களையே இந்தக் குழுவில் 'சைபர் கண்காணிப்பாளர்' களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தன்னார்வலர்களாக நியமிக்கப்படும் குடிமக்கள் நேரடியாக மத்திய அரசுக்கு ரிப்போர்ட் செய்ய முடியுமாம்.முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இந்தத் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இணைப்புப் புள்ளியாகச் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.