ரயில்வேயில் ‘டி’ பிரிவு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது மரணமடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் இனி குறைந்தபட்ட கல்வித்தகுதி என்ற விதியை நீக்க ரயில்வே வாரயிம் முடிவு செய்துள்ளது.
ரயில்வேயில் ‘டி’ பிரிவு ஊழியர்கள் பணிக்காலத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நோய் காரணமாக ஓய்வு பெற்றாலோ வாரிசுதாரரான அவர்களது மனைவிக்கு அல்லது வாரிசுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதற்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இதுபோன்று பல சம்பவங்களில் ரயில்வே அறிவித்துள்ள குறைந்சபட்ச கல்வித்தகுதியில் வாரிசுதாரர் இல்லை என பல்வேறு ரயில்வே கோட்டங்களில் இருந்து தொடர்ந்து ரயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்தன.
இதைதொடர்ந்து, ரயில்வே வாரியம் அத்துறை அமைச்சகத்துடன் தீவிர ஆலோசனை நடத்தியது. இதில், வாரிசுத்தாரர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற விதியை நீக்க முடிவு செய்து அனைத்து கோட்டங்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.