ராமர் கோவில் கட்ட நன்கொடை: இதுவரை ரூ. 1,511 கோடி வசூல்

by Balaji, Feb 14, 2021, 19:02 PM IST

அயோத்தி ராமர் கோவில் கட்ட இதுவரை, 1,511 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. அயோத்தியில், பிரமாண்டமான அளவில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தக் கோவிலைக் கட்டுவதற்காக நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடம் இருந்து நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொருளாளரான சுவாமி கோவிந்த தேவ் கிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் ராமர் கோவில் கட்டு கட்டுவதற்கான திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பணி துவங்கியது. இதற்காக நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் பெருமளவு நன்கொடை அளித்து வருகின்றனர்.

இதுவரை, 1,511 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. நாடு முழுதும் நான்கு லட்சம் கிராமங்கள் மற்றும் 11 கோடி குடும்பங்களிடம் கோவில் கட்டுவதற்கான நன்கொடையை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி வரை நன்கொடை திரட்டப்படும். 492 ஆண்டுகளுக்கு பின், இப்போதுதான் , நன்கொடை அளிப்பதன் மூலம், அயோத்தி ராமர் கோவிலின் திருப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது. நன்கொடை நிதியை வசூல் செய்ய ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் 150 குழுக்களை அமைத்துள்ளது. பத்து ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி குழந்தைகள் தங்கள் சேமிப்புகளை கொடுக்கின்றனர். தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், தெரு விற்பனையாளர்கள், ரிக்‌ஷா ஓட்டிகள் என எல்லா தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் சாதி மத வித்தியாசமின்றி நன்கொடை அளித்து வருகின்றனர். நன்கொடை மூலம் திரட்டிய நிதி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளில் உடனுக்குடன் செலுத்தப்பட்டு வருகின்றன. ரூ.10, 100 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் தன்னார்வத் தொண்டர்கள் இடம் கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலாகும் தொகை ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளில் உள்ள அரக்கட்டளை கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தப் பணியில் 37,000 தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தந்து பங்களிப்பாக ரூ.5 லட்சத்து 100 ரூபாய் கொடுத்துள்ளார். நன்கொடை வழங்கியுள்ளார்.

You'r reading ராமர் கோவில் கட்ட நன்கொடை: இதுவரை ரூ. 1,511 கோடி வசூல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை