புதுச்சேரியில் இன்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுவரை 4 எம்எல்ஏக்கள் அம்மாநிலத்தின் ராஜினாமா செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க ஒட்டுமொத்த அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி புதுச்சேரி பரபரத்துக் கிடக்கிறது.சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரசுக்கு மிகப் பெரும் சோதனை காலமாக அமைந்திருக்கிறது.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இன்று காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆக மொத்தம் இதுவரை 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.