புதுச்சேரியில் புதிய ஷாக்: திமுக எம்எல்ஏவும் ராஜினாமா

by Balaji, Feb 21, 2021, 17:11 PM IST

போகிற போக்கைப் பார்த்தால் புதுச்சேரியில் 30 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் போலிருக்கிறது. ஏற்கெனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள செய்து அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசனும் செய்து அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறார். சபாநாயகரிடம் தனது ராஜினாமா கொடுத்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த அவர் எனது தொகுதியில் அடிப்படை வசதிகூட இந்த அரசால் செய்து கொடுக்க முடியவில்லை என்ற வேதனையுடன் ராஜினாமா செய்ததாக சொன்னார். நான் ராஜினாமா செய்வது கட்சி தலைமைக்கு தெரியும். சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்து இருக்கிறேன்.

திமுகவில் இருந்து விலகவில்லை. யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. மாற்றுக் கட்சியில் கட்சியில் இருந்து யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை என்று காரணம் சொல்லி இருக்கிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருக்கும் சூழ்நிலையில் ஐந்தாவதாக ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் ராஜினாமா செய்தது முதல்வர் நாராயணசாமியை கலங்க வைத்திருக்கிறது. இப்போது கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது கிட்டத்தட்ட ஆட்சி காலி என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து அரங்கேறிய தொடர்ந்து நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை நாளை ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading புதுச்சேரியில் புதிய ஷாக்: திமுக எம்எல்ஏவும் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை