ஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி

by Balaji, Feb 27, 2021, 20:40 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 14 முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.திருமலையில் இன்று அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது :திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2021 - 22 ஆண்டுக்கான ரூ 2937.82 கோடியில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 முதல் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகளில் பக்தர்களைப் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக கொரோனா பரிசோதனை முடிவு அறிக்கை கொண்டு வர வேண்டும். கோவிட் 19 விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.அனைத்து தேவஸ்தான ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.கோயிலுக்கு கோ மாதா திட்டத்திற்கு நாடு நாடு முழுக்க நல்ல வரவேற்பு உள்ளது. . எனவே பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் உள்ளது போன்று திருசசானூர் பத்மாவதி தாயார் கோயிலில் துலாபரம் நடத்தப்படும். மற்ற கோயில்களைத் தேவஸ்தானத்தின் கீழ் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கோயில்களுக்கு ஸ்ரீவானி அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி வழங்கப்படும்.ஜம்மு , மும்பையில் பெருமாள் கோயில்கள் கட்ட விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.ஸ்ரீவாரி மேட்டுவின் பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு மீண்டும் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டுமான அறக்கட்டளை தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கினால், பெருமாள் கோயில் அல்லது பஜனை மந்திர் அல்லது யாத்ரீகள் விடுதி என அவர்கள் விரும்பியதைத் தேவஸ்தானம் மூலம் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

You'r reading ஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை