இருமாநிலங்களைச் சேர்ந்த காதலர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்லியபோது நடந்த சம்பவத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நிலையில், ஏராளமானோர் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் விவேக் ராஜூ. அவர் தனது பஞ்சாபில் வசிக்கும் பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும் வெவ்வேறு மாநிலங்களைச்ச சேர்ந்தவர்கள். மேலும் வீட்டில் காதலுக்கு சம்மதம் கிடைக்குமா என்ற கேள்வியும், பயமும் இருவருக்குள்ளும் நிலவி வந்தது. இந்நிலையில், விவேக் தனது பஞ்சாபி காதலியை பற்றி அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்ததோடு, இந்த சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ``நான் எங்கள் காதலை சொன்னேன். அப்போது நம்பமுடியாத பல வேடிக்கையான விஷயங்கள் அரங்கேறின. அம்மா பரவாயில்லை. அப்பா முற்றிலும் அமைதியாகிவிட்டார். வாழ்நாளில் ஒரு முறை தான் பெற்றோரிடமிருந்து இதுபோன்ற வேடிக்கையான விஷயங்களை எதிர்பார்க்க முடியும் (என் சகோதரரும் இதுபோல செயலில் எடுபடாமல் இருந்தால்) என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் தனது காதலியின் குடும்பம் டேட்டிங் மற்றும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறினார். இதனிடையே என்பது தந்தை அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துவிட்டு எனது காதலியை சந்திக்க முடிவு செய்தார், நாட்டை அச்சுறுத்தும் உலகளாவிய தொற்றுநோயை முற்றிலும் தவிர்த்துவிட்டு கூட இந்த முடிவை எடுத்தார்.
தனது தந்தை, மருமகளாக வரப்போகும் பெண்ணை நேரில் சந்திக்க விரும்பினார். வீடியோ கால் மூலம் பேசலாம் என்று அவர் சொன்னபோது தந்தை அதை மறுத்துவிட்டார். விவேக் ராஜு தனது காதலியின் குடும்பத்தினர் டேட்டிங் பற்றி எதுவும் கூறவில்லை, அவர் தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசியபோது அவர்கள் எவ்வித நாடகமும் இன்றி தங்கள் சம்மதத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள நெட்டிசன்கள் படு ஆர்வமாக இருக்கின்றனர். இதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.