நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் வழக்கத்தை விட அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையை பார்த்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக பொமக்கள் எண்ணுகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் உரையாடியதை மத்திய நிதியமைச்ச்ர நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், நாடு முழுவதும் பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதாகவும், உள்ளூர் கட்டுப்பாடு மட்டுமே இருக்கும் என டேவிட் மல்பாஸு-விடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.