கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன நடக்கும்? - மருத்துவர் அதிர்ச்சி தகவல்

by Ari, Apr 17, 2021, 07:59 AM IST

உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தற்போது, கோவாக்சின், கோவிஷீல்ட் என இருவிதமான தடுப்பூதிகள் போடப்படுகின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் சிலரை வைரஸ் தாக்குவதாலும், சிலர் உயிரிழந்ததாலும், பலர் தடுப்பூசி போடுவதற்கே அச்சப்படுகின்றனர்.

தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் என்ன மாற்றம் ஏற்படும், தடுபூசி செலுத்திய பின்னரும், கொரோனா வைரஸ் தாக்குவது எப்படி என்பது குறித்து மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையின் தலைமை மருத்துவர் சுனிலா கார்க்குடன் பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

அதில், “இரண்டு சுற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. எந்தவொரு தடுப்பூசி உற்பத்தியாளரும், தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசி 100 சதவீதம் செயல் திறன் கொண்டவை என அறிவிக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் 80 சதவிகித செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அதைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா ஏற்பட 20 சதவிகித வாய்ப்பு உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70 சதவீதம் எனக் கூறப்படுகிறது. கோவிஷீல்டின் செயல்திறன் இரண்டு டோஸ்களின் இடைவெளியிலும் மாறுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் சற்று குறைவான செயல்திறனும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் செயல்திறன் அதிகமாகவும் உள்ளது” எனக்கூறியுள்ளார்.

மேலும். “தடுப்பூசிக்குப் பிறகு, உங்களுக்குக் கொரோனாவின் தீவிரம் அதிகம் இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படாது. தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், உங்கள் உடலில் மெமரி செல்கள் உருவாகின்றன, கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும் என்பதை இவை நினைவில் கொள்கின்றன. வைரஸ் உங்களைத் தாக்கியவுடன், அவை உடனடியாக வேலை செய்யத் தொடங்குகின்றன. எனவே, தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போதும் தனி நபர் இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழிமுறைகளை கடைபிடிக்காததால் தான் தடுப்பூசி செலுத்தியப்பின்பும் சிலரை வைரஸ் தாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

You'r reading கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன நடக்கும்? - மருத்துவர் அதிர்ச்சி தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை