`விவேக் இல்லை என்பதை நம்ப முடியவில்லை – டி.இமான் உருக்கம்!

எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட விவேக்கிற்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் அவரை அனுமதித்துள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பிவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 5 மணி அளவில் நல்லடக்கம் செய்யபட உள்ளது. மேலும் விவேக் மறைவு குறித்து திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் இசையமைப்பாளர் இமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் டி.இமான், ``எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என்றும் இமான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds